இயற்கை சில இனிமைகள்

இரவில் விடை பெற்ற கனவு
துயில் கலைந்த காலையில்
புதிய வேடம் புனைந்து
கவிதையாய் என் முன் நடந்தது !
மாலையில் மகிழ்ச்சியில் சிரித்த நிலா
இன்று பகலில் ஒளியின்றி வருந்தி நின்றது
கவி உள்ளத்தை திறந்து வைத்தேன்
உற்சாகத்துடன் உள்ளே வந்தது !
சில் என்று பூத்த சிறு மலர்
தரையில் விழுந்து கிடந்தது
கவிக் கரத்தினில் மெல்ல ஏந்தினேன்
இனி நான் கவிதையாகிவிடுவேன் என்று
மகிழ்ந்து சிரித்தது !
-----கவின் சாரலன்