பெயர் தேடல்
உன்னை ஒரு பெயர் சொல்லி
நான் அழைக்க வேண்டும்
அது உனக்கும் எனக்கும் மட்டும்
அடையாளமாக இருக்கட்டும்
என்ற உன் கோரிக்கைக்காகப்
பெயர் தேடிக் கொண்டிருக்கிறேன்...
`கண்ணம்மா`
`அம்மு`
`குட்டிம்மா`
பெயர்கள் முன்னமே
புழக்கத்தில் இருக்கிறதென்றும்
சொல்லிவிட்டாய்,
அதனால் அது தவிர்த்தே யோசிக்கிறேன்
வெகு நாட்களாக....
உனக்கோ அல்லது
உன் நினைவாக என் குழந்தைக்கோ
பயன்பட வேண்டும் என்ற
கூடுதல் அக்கறையும் இருக்கிறது
அத் தேடலில்...!