நான் பார்த்த உலகம்

நான் பார்த்த உலகம்

உற்று நோக்கி பார்....
உலகம் உன் நினைப்பை போல் அல்ல...!!!

பார்த்தால் அரளியின் அழகு மட்டும் தான் தெரியும்...
பழகி பார்...
அதன் விஷம் வரை புரியும்....

காதுகளால் கேட்டது போதும்...
பார்த்து பழகு...
உன் காதுகளாலும் பார்த்து பழகு....

கண்களால் பார்த்தது போதும்....
கேட்டு பழகு..
உன் கண்களாலும் கேட்டு பழகு...

நடந்து பார்...
நண்பர்களுடன் மட்டும் அல்ல....
பகைவர்களின் பாதையும் பார்த்து.....

சிரித்து பார்....
நிழல் உலக நகைசுவைகாக மட்டும் அல்ல..
நிஜ உலக துன்பகளுக்காகவும்...

ஒரு வாழ்கை...
ஒவ்வொரு தவறும் ஒரு முறை...
அதன் காரணம் யாராகவோ இருக்கட்டும்...
முடிவு நீயாக மட்டும் இரு......


வாழ்த்துக்கள்..!!

எழுதியவர் : pragathees (24-Aug-15, 5:57 pm)
Tanglish : naan partha ulakam
பார்வை : 198

மேலே