விடாமுயற்சி
உச்சி வெயிலில்
மூச்சு இளைக்கும்
தொண்டை வறட்சி
வியர்வை நனைக்கும்
கொஞ்சம் உட்காரணும்
நிழலையே காணும்
கற்கள் முட்கள் அதிகம்
காற்று அரவம் காணும்
செங்குத்தான படிகள்
சிவந்து அயரும் பாதம்
இவையாவும் மனதில்
அலைபாய இடையில்
பலநூறு படிக்கற்கள்
பல்வேறு தடைக்கல்
அடுத்த ஷணம்
அடுத்த படிக்கல்
அது ஒன்றே குறி
வேறு ஏது வழி