சுதந்திரம்

சிறகடித்து வானில் பறந்து..
சடைவு போக்க சிறு குரலால் இசைந்து..
கிடைத்த உணவை சமத்துவமாய் பகிர்ந்து..
மரக்கிளையில் மகிழ்வாய் அமர்ந்து..
வாழ்ந்துக் கொண்டிருந்த பறவைகளை..
சிறகொடித்து சிறுகூண்டுக்குள் அடைத்து..
நாம் குடியிருக்க அது குடிபோன மரவீட்டை அழித்து..
அதோடு அதன் சுதந்திரத்தையும் பறித்து..
நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் எப்போதும் சுதந்திரமாய்..