என் சந்தோச காற்றே

வாழ்க்கை என்னும் புத்தகத்தை படிக்க நினைக்கிறேன்...
படித்து கொண்டே இருக்கிறேன்....
ஆனால் பாதி முடிப்பதற்குள் என் மீதி பக்கங்கள் எல்லாம் துன்பம் என்னும் கண்ணீர் நதியில் நனைகின்றன ஒரு சில நேரங்களில் இன்பம் என்னும் சந்தோச காற்று வீசினாலும் என் கண்ணீர் பக்கங்கள் உளர மறுக்கின்றனவே.....
என் புத்தகம் முழுதும் கண்ணீர் நதியில் மூழ்கி விடுமோ... சந்தோச காற்று வீசமலே போய்விடுமோ..
என் புத்தகம் கொஞ்சம் கொஞ்சமாக சந்தோச காற்று இல்லாததால் கண்ணீர் நதியில் நனைந்து கிழிந்து அடித்து செல்கிறதே.....


என் வாழ்க்கை மனிதன் செய்த எந்திரம் செயற்கை வாழ்க்கை (மற்றவர் கட்டுபாட்டில்) வாழ்வது போல் உள்ளது...
எனக்கு என் வாழ்க்கை இறைவன் படைத்த அழகான பூவாய் ஒரு நாள் வாழ்ந்தாலும் இயறக்கை வாழ்க்கை (என் விருப்பப்படி) வாழ வேண்டும்....

எழுதியவர் : கனி (1-Sep-15, 10:26 pm)
Tanglish : en sandhosa kaatre
பார்வை : 98

மேலே