வெறுமையின் விருப்பு
என் பிண்டம்
நிறைத்த
உயிர்துளியே!
நிலவை பிழிந்து
கண்ணாடி
குவளையிலூற்றி
குடித்தபடி
இராத்திரியின்
நிஷப்தம்
ரசிக்க வருவாயா!!
ஹார்மோனில்
தீயிட்ட
தேவதையே!!
தேனீர்கோப்பையில்
உதடுபதித்து
அமிர்தம்
ஊட்டிவிட
அன்பே நீ
வருவாயா!!
என் இதயம்
துடிக்கவைத்த
ஜீவக்காற்றே!
பிரபஞ்ச
முகடுபிரித்து
அண்டவெளிக்கு
அப்பால் போய்
ஜீவிதம் செய்ய
வருவாயா!!
என்
முகாரி இழைத்த
இராத்திரியில்
பூவாளம் இசைத்த
பூ வனமே!!
பூர்வஜென்ம
நினைவு பெயர்த்து
அதற்கும் சேர்த்து
காதல் புரிய
வருவாயா!
என் வெப்பகீற்றில்
குடைபிடித்து
நடந்த
குளிர்கழியே!
உன் மெளனம்
தாண்டி என்
உயிர் சேர்வாயோ!!
கடைசிவரை
உதடுபிரிக்காமல்
கல்லறையில்
எனை சேர்ப்பாயோ!!