உன்னைக் கண்டு கொண்டேன்

உன்னைக் கண்டு
கொண்டேன்....என்னைத்
தொலைத்து
நின்றேன்......

தொலைவில் நீயும்
போகிறாய்....
நினைவில் இன்னும்
நிற்கிறாய்......

கனவில் வந்து
கண் விழி
திறக்கிறாய்.....கனவல்ல
நிஜமென்று
கிள்ளிவிட்டு
மறைகிறாய்......

அள்ளித் தந்த
அலைபேசி
முத்தங்கள்.....
வாங்கிப் பேசிய
பொழுதுகள்
வாழ்நாள் சுவாரஸ்யங்கள்......

சண்டையிட்ட
சில நொடிகள்.....
மௌனித்த
உதடுகள்......
சட்டென மாறிய
வானிலை போல.....
பரிமாறிய
முத்தங்கள்......
சந்தோசமாய்
கலந்தது
மனதோடு.....

காதல் தந்த
காயங்கள்
காதலால்
அழிந்தது......
ஆதலால்
காதல்
என்றும்
அழியாது......!


காதலுடன்.......இவன்
Thampu

எழுதியவர் : thampu (6-Sep-15, 4:59 am)
Tanglish : unnaik kandu konden
பார்வை : 149

மேலே