வரதட்சணை

குடும்பம் காக்க, வயித்த ரொப்ப
அப்பப்ப சில்ர துட்ட வாங்கி
முழுசா, திருப்தியா
உடல் சொகம் கொடுக்குறவள
நாக்கு மேல பல்லப் போட்டு
இரக்கமே இல்லாம
விபச்சாரின்றான்...

துட்டயும், நகையையும்,
தட்டு முட்டு சாமனையும்
வரதட்சணை-ங்கிற பேருல
மொத்தமா வாங்கி
சாவற மட்டும்
அரை குறை உடல்,
மன சொகம் கொடுக்குறவன
கஷ்மாலங்க புருஷன்றான்!

என்னியக் கேட்டா
ரெண்டுமே விபச்சாரந்தான்...
ரெண்டு பேருமே விபச்சாரங்கதான்.

வரதட்சணையே வாங்காம
கலியாணங் கட்டுறவன்
பெரிய மனுஷன்.

அப்டிக்கா தெரிஞ்சோ, தெரியாமலோ
வாங்கியிருந்தா - அத்த
ரிட்டன் குட்துட்டாக்கா
நீ அல்லாத்துக்கும் மேல
ஷோக்கான அப்பாடக்கர் யோக்கியன்ப்பா.

எழுதியவர் : பேட்ரிக் கோயில்ராஜ் (9-Sep-15, 6:27 am)
பார்வை : 751

மேலே