என்

மழையில்லாமல் குடை
பிடிக்கிறேன்
அவன் காதல் மழையில்
நனையப் பிடிக்காமல்

கனவில்லாமல் துயில்கிறேன்
அவன் கனவில் வருவது
பிடிக்காமல்

நிழலில்லாமல் நடக்கிறேன்
அவன் நிழலென வருவது
பிடிக்காமல்

கண்களை வெறுக்கிறேன்
என் கண்கள் அவனை
தேடுவது பிடிக்காமல்

இதயத்தை அடைக்கிறேன்
என் நினைவுகள்
அவனென பிடிக்காமல்...

எழுதியவர் : fasrina (14-Sep-15, 2:37 pm)
Tanglish : en
பார்வை : 85

மேலே