அறிவாயோ?????

அறிவாயோ?????

அறிவேன் உன்னை போல் இருக்கும் வேறு ஒருவளை ஏற்க முடியாது என்று!
அறிவாயோ உன்னை ஏற்று கொள்ள வைத்தவள் நீ தான் என்று?

அறிவேன் உன் ஆசைகளை என்னால் நிறைவேற்ற முடியாது என்று!
அறிவாயோ அவற்றை அன்றே நிறைவேற்றி கொண்டு இருக்குறேன் என் கனவில் என்று?

அறிவேன் என்னால் உன்னை வெல்ல முடியாது என்று!
அறிவாயோ என்னை நீ வென்று விட்டாய் என்று?

அறிவேன் வீம்புக்கு உன்னிடம் சண்டை போடுகிறேன் என்று!
அறிவாயோ அந்த வீம்புக்கு மறு பெயர் அன்பு என்று?

அறிவேன் என் நினைவுகளில் உன் நாள்கள் இல்லை என்று!
அறிவாயோ உன் நினைவுகளில் தான் என் நொடிகள் என்று?

இதை எழுதிய நான் யார்?

சூரியனை விரும்பும் ஒரு பனித்துளி!
ஏக்கத்தோடு நிலவை பார்க்கும் ஒரு பைத்தியகாரன்!

இவை அனைத்தும் புரிந்தும் விட்டு கொடுக்க மனம் இல்லை, இறுதியில் இது தான் தோன்றியது,

நான் இருக்குறேன் ஒல்லியா
உனக்கு நான் தாண்டி ஆரியா.

எழுதியவர் : ஐயம் (3-Jul-10, 1:18 pm)
சேர்த்தது : Iyyam
பார்வை : 625

மேலே