காதல் நிலவு
வானம் இல்லாமல்
வலம் வரும் நிலவே. - உன்
வாடை இல்லாமல்
வாடுது என் இரவே.
நிலவுக்கூட மண்ணில் நடக்குதே - என்
நிழலைக்கூட அது மடக்குதே.
மீனுக்குத் தண்ணீர்தானே ஆதாரம் - என்
மனதிற்குள் உன் நினைவே கூடாரம்.
தூண்டில் இட்டப் புழுவாய் ஆனேன் நானே.
துடித்துக் கொண்டிருக்குது உன்னால் தானே.
துடிக்க வைத்தது உன்னால் தானே.
எட்டியப் பார்வையில் உலவும் நிலவே - உன்னை
எட்டிப் பிடிக்க நினைப்பது என் தவறே.
நீ நீரில் மிதக்கும் நிலவல்லவா - உன்னை
நெருங்கி அணைப்பதுத் தவறல்லவா.
விழியால் தொட்டாய் வெளிச்சம் தந்தாய் - நான்
விரலால் தொட்டேன் விலகிப் போனாய்.
பிறை நிலவோ முழு நிலவோ நானறியேன் - நாளும்
பௌர்ணமியாய் நீ ஒளிர நான் வருவேன்.
என்னையே வானமாய் ஏற்றுக் கொள்வாயடி - அதில்
உன்னையே தேயாமல் வளர்ப்பேனடி. - நீ என்
காதல் நிலவு அல்லவா - இடமே இல்லாமல்
கலங்காதே நிலவே.- என்னோடு இணையவா
காத்திருக்கேன் என்னை அணைக்கவா.
பூக்கூட நாரில் இணைந்தால்தான் மாலையாகும்
நீகூட வானில் இருந்தால்தான் கலையாகும்.
இருட்டுக்கு வெளிச்சம் தரும் நிலவே.- என்
இதய வானம் என்றும் உன் உறவே.