வெளிச்சம்
பகல் வெளிச்சமோ
இரவு வெளிச்சம் பொருட்படுத்தா
குணக் கலவை வெளிச்சம் பூண்டு
உருவான காரணம் தான் !
மனதின் ஆசைச் சாரல்
மற்றொரு மனத் தரையில்
புணர்கின்ற படலமோ !
நேர்ப் பார்வைக்கும் விழிகளின் மொழிகளுக்கும்
பிறந்த தலைமையோ !
அழிந்த இனத்திற்கும்
அழியப் போகும் இனத்திற்கும்
சோறிட்ட புண்ணியத் தலைவன் !
முகத்தரையில் ரோஜா
இதழ் பட்ட வருடிய பரிசு
தாய்க்கு கிடைத்த உயரம் !
தும்மல் தந்த இடைவெளி கூட
கிடைக்கப் பெறாத என் இதயத்திருக்கு உன் நினைவுகள் பற்றி ......
பச்சையம் துளி கொண்டு
பரதேசம் கொண்ட தாய்-மை கொண்டு
பட்டெடுத்த குணம் அது !
குவியச் சாரல் ஒன்று குழந்தை
கை தொட்டு தன்னொற்றண்டின்
எடுத்துக் காட்டில் விழத் தெரிந்த சினையில்
தோன்றிய உணர்வு !
பனித் துளியின் இடைவெளி கொண்டு
பினைத்திராத உணர்வு கொண்டு - உறவைக்
கண்டிராத ஜென்மம் கொண்ட பிறவி யார் !
பாட்டிசைத்த வயலின் சப்தம்
சாவி தயாரித்து - மெல்லிய மனதுக்குள் நுழைந்து
இழைப் பாரவைத்து விதைத்த நெல் பயிர் இவள் கண்ட விந்தை !
வெண்மை தாய்மை வாசம் !
தூய்மை உடல் வாசம் !
(பெ)ஆண்மை காதலின் வாசம் !