சக்திப் பாண்டி

ஒரியைபுப் பாண்டி

சக்திபதம் போற்றிடுவாய் நீயே - நமைச்
சாந்தமுடன் காத்திடுவாள் தாயே !
மக்கள்மனம் மிக்கும்பிழைத் தீயே - அவள்
மலர்பதத்தில் தணியும்காண் பாயே !
பக்கபலம் ஆகுவதும் தாயே - வரும்
பணிகளையும் உவந்தேஏற் பாயே
பக்தியினால் கனியாகும் காயே ! - பெரும்
பயமனைத்துந் தீர்ந்திடக்காண் பாயே !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (25-Sep-15, 4:49 pm)
பார்வை : 64

மேலே