இருள்
இருள் கள்வனுக்கு மட்டும் உகந்தது அல்ல,
இருள் கவிக்கும் உகந்தது,
ஏன் என்றால்?
இந்த கவிதை எழுதும் போது நேரம் இரவு பனிரெண்டு ஆனது,
தூரத்தில் எரியும் விளக்கு ,
நிழல் கண்டு குரைக்கும் நாய்,
பாம்புக்கு தூதுவிடும் தவளைகள்,
ஆந்தையின் அழகிய கண்கள்,
ஓடைக்கு பாடம் சொல்லும் நிலா,
கடிகார நொடிமுள் சப்தம்,
குஞ்சு குருவிகள் கூடிப் பேசுவது,
இரவுவேளை உணவிற்காக எலிகள் அலைவது,
இதையெல்லாம் ரசிக்கும் போது மனதோடு ஓர் கலக்கம்,
விடிந்தால் இதையெல்லாம் காண முடியாதே என்று
இருளே இரு! இரு!
உன்னை நன்றாக ஒருமுறை பார்த்துக்கொள்கிறேன்,,
என்னடா இது?
ஒரே இருட்டா இருக்கு,,,,,,,,,,,,,,,,
கவி 24