காதலில் தோற்றுப் பார்

------------------------------------------------
காதலில் தோற்றுப் பார்...

கண்ணைச் சுற்றி
கருவளையம் தோன்றும்
உலகம் உதாசீனமாகும்

இரவும் பகலாகும்
பகலிலும் இருள் சூழும்

உனக்கும் உளற வரும்
கையெழுத்து கை நாட்டாகும்
தெய்வமும் தெரியாமல் போகும்

உன் பிம்பம் கூட
கண்ணாடி மறந்து விடும்

கண்ணிருந்தும் ஒளி மறையும்

காதலில் தோற்றுப் பார்......

-----------------------------------------------

மெத்தை தலையணை மறந்துவிடும்
விழி விட்டத்தை வெறித்திடும்

காக்கையும் உன்னை கவனித்திடும்
ஆனால் - இந்த உலகமே
உனக்கு தனித்து விடும்

தொண்டைக்கும் வயிற்றிற்குமிடையே
ஒரு கவளச் சோற்றுருண்டை
கூட இறங்கிட மறுக்கும்

இந்த வானம் இந்த அந்தி
இந்த பூமி இந்தப் பூக்கள்
எல்லாம்
என் கல்லறையைக் கௌரவிக்கும்
ஏற்பாடுகள் என்பாய்

காதலில் தோற்றுப் பார்.........

-----------------------------------------------------

நரகம் அனுபவித்து
சொர்க்கம் சென்றிட

காதலில் தோற்றுப் பார்..............!!!

~ தப்தி செல்வராஜ், சாத்தூர்
---------------------------------------------------------
(குறிப்பு: கவிப் பேரரசுவின் வரிகளைச் சார்ந்து இக்கவியினை நான்
எழுதியுள்ளமைக்கு எழுத்து முன்னோடிகள் பொறுத்தருள வேண்டுகின்றேன்)
----------------------------------------------------------

எழுதியவர் : தப்தி செல்வராஜ், சாத்தூர் (1-Oct-15, 8:37 am)
பார்வை : 359

மேலே