பிள்ளைகள் பிழைகள்
தொட்டிலை ஆட்டி விட்டு
இந்த குழந்தைகள் கிள்ளப்படுகின்றன ...
தெருவோர குடில்களில
கும்மாளமிடுகிற வறுமை ...
பீசா பார்க்கர் என குப்பைத்தொட்டிகள்
நிரம்ப .....பின் அன்றைய பசிக்கணக்கு முடிக்கப்படும்
குழந்தைகளை ஏதாவது ஒரு வசந்தகாலம்
இ[ல்]லை யுதிர்த்திவிட்டு அமரும்....
கார்களில் சென்றபடி கை காட்டிப்போகும்
பணக்கார குழந்தைகளுக்கும் தெருவாசி
குழந்தைகளுக்கும் இடையில் இன்னும்
ஒரு பெரிய வறுமை கோடு நீள்கிறது ,,,,
குட்டி பொம்மைகளுக்குள்
பெரிய இதயங்களை
புதைத்து நிற்கிற
இந்த குழந்தைகளுக்குள்
இன்னும் பெரிய பெரிய
ஆசைகள் வெடித்து
எலும்ம்பிகொண்டே இருக்கிறன......