உருகியதில் உறைந்தேன்

அத்தனை சாதரணமாய்
எடுத்துக் கொள்ள முடிவதில்லை
ஐஸ்க்ரீம்களை....

உனக்காகவே
வார்க்கப்பட்ட நிறங்களிலும்..
சுவைத் திளைப்பிலும்..

சற்றுத் தாமதித்தாலும்
கொஞ்சமாய்
புகைந்தும்
கோபங்கள் கசியவிட்டும்.....

தீண்டிய பொழுதுகளில்
உருகி நெகிழ்ந்தும்....

இன்னொன்றுக்கு
விடாமல் சுயம் குழைந்து
திகட்டச் செய்தும்..

பிரச்சனை என்னவென்றால்
உனக்கு ஐஸ் க்ரீம்களைப்
போலவே...
எனக்கு நீயுமாகியிருந்த
பொழுதுகளில்....

அத்தனை சாதரணமாய்
எடுத்துக் கொள்ள முடிவதில்லை
இந்த.... ஐஸ்க்ரீம்களை....!!!

எழுதியவர் : கட்டாரி (1-Oct-15, 1:00 pm)
பார்வை : 185

மேலே