நான் இதுவா - 1
நான்..என்பது ..
எவற்றால் ஆனதென்று பார்த்தேன்..
சொல்லித்தரப்பட்ட ..
பயங்கள்..முன் நிகழ்வுகள்..
இப்படியிருந்தால்
இது நல்லது..
இது கெட்டது..
விருப்பங்கள்..
வெறுப்புகள்..
இதெல்லாம்தான் நிறைந்திருக்கும்..
எனது "நான்" ல்
நான் இல்லை
என்பது புரிகிற நேரம்..
நான் என்பது யாதெனவும்
புரியத் தொடங்குகிறது..!