காத்திருக்கு கவிதை

*
காற்றில் அழகாய் அசைத்தாடும்
வேப்பமரங்கள் பூத்திருக்கு
நந்தியாவட்டை பூச்செடியில்
வெண்மலர்கள் சிரித்திருக்கு
பசுமையான கிளைநுனியில்
செண்டுப் பூக்கள் சிவந்திருக்கு
மணக்கும் மல்லி பட்டுரோஸ்கள்
கைப்படாமல் காத்திருக்கு
தெய்வமாய் வணங்கும் துளசிசெடி
தொட்டியில் வளர்ந்து நிமிர்ந்திருக்கு
திருஷ்டிக்கு வைத்தக் கள்ளிசெடிகள்
பச்சை மடல்கள் விரி்த்திருக்கு
வீதியில் போவோர் வருவோரெல்லாம்
செடியில் ஒரு கிளையினைக்
கொடுங்கள் என்று கேட்கின்றார்கள்
சிரிப்பை உதிர்த்துச் செல்கின்றார்கள்
*

எழுதியவர் : ந.க.துறைவன் (7-Oct-15, 10:07 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 100

மேலே