துப்பாக்கி பேசுகிறது

நண்பர்களே இது 2009 இல் நான் எழுதியது

வேதாந்தம் பேச
இது என்ன வேர்கடலை
பிடுங்குமிடமா
வேலியே பயிரை
மேய்கின்ற காலமடா

வேதனைக்குள்
வேள்வி நடத்தி
கேள்விக்கு விடை
காணும் நேரமடா!?

அங்கே பார்
கண்ணுக்கு
புலப்படும் தூரம்
காக்கைகள்
காதுகளுக்கு -சேதி
சொல்லுகிறது

''எங்களையும்
வாழ விடுங்கள்'' -இது
குரங்குகள் கூவலல்ல...

என்
பசிப்பையை
நிரப்புவேனா
பச்சிளங்குழந்தை
வயிற்றை
நிரப்புவேனா
செஞ்சிலுவையே
செய்தி கொண்டு
வாயேன்
என்
தாய் புலம்புகிறாள்
ஏக்கமாய் ...

அண்ணா...என் கர்ப்பை
களவாடிய கூட்டம்
காட்டுக்குள் அல்ல
காவல் படைக்குள்
கள்ளங்கபடமற்ற
தங்கை உலருகிறாள்
பைத்தியமாய் ...

பிறம்பாக
பிஞ்சு கால்கள்
அவர்கள் கையில்
சுற்றி வீசியடித்தது
நெற்றியுடன் கூடிய தலை
ஐயோ ...அம்மா
என் தம்பி அங்கே
அது
அழுகுரலா ? அபாய குரலா ?
பட்டிமன்றம் இங்கே

டமடமா ...டமடமா
இடி முழக்கம்
வான்மழையோ -என
வாய் பிளந்து நிற்க
வந்து விழுந்ததோ
குண்டு மழை
பிரிகின்றது
எண்ணற்ற
உயிர்
சிதறுகிறது
அவர்களது
உடல்
பரிதாபம் -அக்தோ
பரிதாபம்

கீரிப்பிள்லையோ
தரைவழியாக
கழுகு கூட்டமோ
விமான வேகத்தில்
முள்வேலியோ
நாற்ப்புரமும்
ஈழக்குஞ்ச்சோ
பரிதாபம்
ஈசலைப்போன்று
முல்லிவாயிக்காலிலே

துப்பாக்கி பேசுகிறது
''நான் அனுப்பியது
தோட்டாதான்
உன்னை தொடுவதற்குள்
பேச்சுவார்த்தை
முடித்துவிடலாம்
கவசங்களை
காட்டுக்குள் வீசிவிட்டு
கண்ணெதிரே
வாயென்று''

தாய் கோழியோ
தவிப்பின்றி
தமிழ் மண்ணிலே
கல்மனமோ
எடுத்துவாருங்கள்
கடப்பாறையை
உடைத்துப்பார்ப்போம்
''ஈரம்'' இருக்கிறதா என ...

வெள்ளை யெனை
விரட்டி அடிக்க - அன்று
வாளெடுத்த முதலினம்
தமிழினமே !
நேத்தாஜி கூப்பிட்ட
குரலுக்கு
குருதி கொடுத்த
முதலினமும்
தமிழினமே !

இன்று - அந்தப்புற
''நேதாஜி ''
அழைக்கத்தான்
வேண்டுமோ
ஈழத்தை மீட்க...

''மனிதன் கல்லாய்''
உலகில் சரித்திரம் உண்டு
கல்லே மனிதனாய்
பிறந்திருக்கும்
சாமர்த்தியம் உண்டு -ஆம்
தமிழ் மண்ணிலே .

எழுதியவர் : (7-Oct-15, 2:17 pm)
பார்வை : 79

மேலே