காதல் வேண்டாம் தோழியே

அவள் என் தோழி
இன்று என் காதலி

என் தோழியாய் அவள்
என் துன்பங்களில்
உதவினாள்

காதலியாய் அவள்
என் இன்பங்களில்
உதவினாள்

என் தோழியாய் அவள்
சிக்கனம் கற்றுத்
தந்தாள்

காதலியாய் அவள்
செலவை கற்றுத்
தந்தாள்

என் தோழியாய் அவள்
என்னை புரிந்து
கொண்டாள்

காதலியாய் அவள்
புரிந்து கொள்ள
மறுக்கிறாள்

புரிந்து கொண்டேன்
எனக்கு காதலி வேண்டாம்
தோழி வேண்டும் என்று ..

எழுதியவர் : fasrina (10-Oct-15, 9:30 am)
சேர்த்தது : fasrina
பார்வை : 215

மேலே