குழந்தைகள்

மனித இனம் வளர்ந்திடவே
மழலை இனம் வேண்டுமடா!
மக்களாட்சி மலர்ந்திடவே
குழந்தைகூட தெய்வமடா!

பொய் பேச தெரியாமல்
வாய்கூட பிதற்றிடுமே!
மெய்பேசும் நம்குழந்தை
தெய்வத்தை மிஞ்சிடுமே!

ஆண்குழந்தை ஆட்சிக்கு
பெண்குழந்தை பாசத்திற்கு
என்குழந்தை எனக்காக
எப்போதும் நமக்காக!

அன்னைமொழி பேசிடுமே
அன்பு மொழி பொழிந்துடுமெ!
எந்தன் இனம் வளர்ந்திடவே
குழந்தை வேண்டுமென்பேன்!

ஊட்டிவிடும் அன்னைக்கு
உறங்காத இரவுகள்தான்
உனக்க்காக உயிர் தந்தாள்
உலகமே நீதான் என்பாள்!

எழுதியவர் : ரவி ஸ்ரீனிவாசன் (13-Oct-15, 1:29 pm)
Tanglish : kuzhanthaigal
பார்வை : 72

மேலே