கவியரசின் பாடல்கள் ரசனைகள் 1
கவியரசின் பாடல்கள். .ரசனைகள்! 1
.நான் நிரந்தரமானவன். .அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு
மரணமில்லை. .' ....
எனத் தன் உன்னதத்தின் விதியை. .தானே நிர்ணயித்துக் கொண்ட மாபெரும் கவியரசர். ..இதில் கர்வம் இல்லை. ..உண்மை என்ற பெருமை உண்டு.
இரத்தத்திலகத்தில் இடம் பெற்ற. .இவர பாடுவதாய் அமைந்த. .
' ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசைப்பாடலிலே என் உயிர்த்துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு. .' ...எனும் பாடலே எனது முதல் பதிவாகிறது.
என்ன ஒரு நிதர்சன மான உண்மை. .
இயற்கை எல்லா அழகும் உள்ளடக்கியது. .மனிதன் ஒருவனே கடவுளாய் அவ்வுலகை ரசிப்பவன்.
இங்கே இவர் தன் பழக்கத்தின் தன்மையையே. . தன் உயிர் வாழ்வே. .இசை உலகின் வழி..காணும் அழகெல்லாம் சிரித்திருக்க அதைக் உணர்ந்து மகிழ்வதே பேரானந்தம். .என உருவகப்படுத்திக் கொண்டிருப்பதிலேயே இவரது ஆழ்ந்த ரசனை புலப்படுகிறது.
'..காவியத்தாயின் இளைய மகன். ..'
அடக்கமாக காவியப் பாடல் பாடுவதின் ஆர்வம் வெளிப்படுகிறது.
'காதல் பெண்களின் பெருந்தலைவன். .'..
இங்கு தன்னைக் காதலிக்கும் பெண்களுக்கு தன்னைக் கண்ணணாகச் சொல்லவில்லை. .காதல் வயப்பட்ட தலைவிகளின் . .பெண்மையின் தன்மையை. .அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு. .என நாலு குணங்களில் நின்று வரம்பு மீறாது சுவைபட உரைத்திடும். .ஒரு பெருந்தலைவனாக தன்னை உருவகப்படுத்திக் கொள்கிறார்.
' பாமர சாதியில் தனி மனிதன்
நான் படைப்பதனாலே பேரிறைவன். .'
ஒரு பிறப்பின் ஏக்க உணர்வை காட்டி.. தனிப்பிறவியாய் தன்னைப் பாவித்து ...பாடல்கள் உண்மை உணர்வுகளில் ஆத்மார்த்த ரசனையில்
தன்னால் படைக்கப் படுதலினால். ..பேரிறைவன். .என்று மெய் மறந்து பெருமைப்பட்டுக் கொள்ள இவராலேயே முடிந்தது.
'மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்
அவர் மாண்டு விட்டால் அதைப் பாடிவைப்பேன். ..'
வண்டிக்காரன் வேகம் போகும்போது. .தன்னை மீறி சாட்டையைச் சுழற்றுவது போன்ற வேகம். ..இவ்வரிகளில். .ஆமாம். .மானிட இயல்பு களில் எதைத்தான் சொல்லாமல் வைத்தார்.
? மாண்டுவிட்டால் பாடி வைப்பேன். ..என்றது மற்றவர்களுக்கு மட்டுமல்ல. .தனக்குமே என்பதை அனைவரும் அறிவோம்..ஆனால அதையும் எப்படி இயம்புகிறார். .பாருங்கள். .
' நான் நிரந்தரமானவன். ..அழிவதில்லை ..
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை. .' ..இன்றும் சத்தியமாக நிற்கும் ஒன்று தானே. .!
இத்தலைவனால் வந்த
தமிழினத்தின் பெருமைக்கு தலைவணங்குகிறேன் .
இசைத்திலகத்தின் இன்னிசையில். .டி எம் எஸ். ..குரலினிமையில் பாடல். .என்றென்றும் அற்புத இன்னமுதம் .
கோதைதனபாலன்