பழைய நினைவுகள் புதிய மலர்கள்
அப்பா அங்கே அந்த வீட்டில்
எல்லோரும் ஏன் ஓல்ட் பீப்பிளா இருக்காங்க ?
அது முதியோர் இல்லம் OLD PEOPLE 'S HOME
வயதானா நீயும் அங்க போயிடுவியா ?
நீ சொன்னால்.....
நீ அங்க போகக் கூடாது ...நான் போக விடமாட்டேன்
காலைக் கட்டிக் கொண்டான் சிறுவன்
சாளரத்திலிருந்து சாலையை வெறித்து நோக்கிக்
கொண்டிருந்த பெரியவர் பழைய நினைவுகளில்
மூழ்கியிருந்தார்
சாலை வெறித்துக் கொண்டு பழைய நினைவுகளில்
ஏன் மூழ்கிறீங்க ..
சாளரத்திற்கு வெளியே புதிதாய்ப் பூத்திருக்கும்
மலர்களைப் பாருங்கள் ---என்றாள் கணினியில் கவிதை
எழுதிக் கொண்டிருந்த மனைவி .
தட்டச்சில் கவிதை வரவில்லை . கண்ணீர்த் துளிகள்
சிதறின .
~~~கல்பனா பாரதி~~~