அன்றோடு அவன் வசமாகியிருந்தது

அன்றோடு அவன் வசமாகியிருந்தது
=====================================

அங்கிருந்த யார்மீதும்
அளவிடாத அவனின் இரு கண்களும்
அளவான சிரிப்போடு
அனைவரிடமும் அவன் செய்துக்கொண்ட
அறிமுகமும்தான்
அத்தனைப்பேருடைய குசுக்குசுப் பேச்சுகளிலும்
அன்று சுவையாகிருந்தன

ஈரக்காற்றில் அசையாத
பைனஸ் மர நூலிலையைப்போல
உடையாத கேசமும் முறுக்காத மீசையும்
அதைத்தாண்டிய உதடுகளும்
யாருக்கும் அவற்றை
பல்லிடுக்குகளால் கடித்துவருடி
மேய்ந்துவிடலாமா என்ற ஏக்கத்தை
கட்டாயம் சொல்லிக்கொடுத்திருக்கலாம் ம்ம்

நாணல் போன்ற
இழுத்துவிடும் பார்வையால்
சாப்பிடத் தோன்றும் குரல் நயத்தோட
இந்த பார்வை போதுமா
என்பதைப்போல
இமை மூடுதலின் பற்றாக்குறைகளை
நிறைவேற்றிக்கொண்டிருந்தான்

பூத்தொடுக்கும் விரல்கள்
மொட்டுகளைக் கண்டதும் ஆயத்தமாவதைப்போல
அந்த மேடையில்
அவனுக்கான அழைப்பின்போது மட்டும்
முழுக்கால் சட்டையையும்
மென்பட்டு குப்பாயத்தையும்
சரி செய்துவிட்டு
ஒருமுறை திரும்பிப் பார்க்கமாட்டானா
என்று வியப்பிலாழ்த்தும்
விழிகளின் கூட்டங்களுக்கு மத்தியில்
ஏமாற்றத்தைக்கொடுத்துவிட்ட
நடையினாலும்,,
எதையும் சொல்லத்தொடங்கும் முன்பான
அவன் புருவ உயர்த்தலின்
வாகினாலும்
அந்த சபையை நிறைத்துவிட்டிருந்தான்

எப்பொழுதாவது அவனுடன் சேர்ந்து
ஒரு coffee பருகும்
உபரிவாய்ப்புக் கிட்டிவிடாதா என
அவன் ஆண்வாசத்திற்கு
நுகருதலால் அணைக்கட்டிவிடும்
ஆவலோடிருக்கும்
அவஞ்சோட்டு பெண்டுகளின்
அதுநாள்வரையின் உறக்கமும்
அன்றோடு அவன் வசமாகியிருந்தது

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (31-Oct-15, 3:12 am)
பார்வை : 139

மேலே