கல்லறை சொல்லும் ஓர் காதல் கதை

காதலில் தோற்றவனுக்கு
கல்லறையிலும் உறக்கமில்லையாய்
எழுந்த நடக்க ஆரமித்தான்
பொழுது போகாததால்....

தன்னை சுற்றிலும் பல புதிய கல்லறைகள்....

ஒரு கல்லறையில் உறங்கிய
ஒருவனை தட்டி எழுப்பினான்
எழுந்தவன் முறைத்து பார்த்து கேட்டான்
தூக்கம் வரலையா.?.

ஆம் என்று இவன் தலையாட்ட
போ என்றான் சொல்லி
ஓர் இடம் காட்டி அனுப்பினான்
அந்த இடத்தில்தான் துங்காதவர்கள் அதிகம் ...

அவன் காட்டிய இடத்தில்
மூன்று தகவல் பலகைகள்
காதலில் தோற்றவர்கள்
காதலில் வென்றவர்கள்
காதலே செய்யாதவர்கள் என....

காதலே செய்யாதவர்கள் திசையில்
ஒரு கல்லறை கூட இல்லை....

ஒருதலை காதலோ
இல்லை பல காதலோ
காதல் செய்யாமல் ஒருவரும் இல்லை
ஆதலால் அங்கு கல்லறையும் இல்லை....

காதலில் வென்றவர்கள் திசையில்
ஜோடி ஜோடியாய் கல்லறைகள் பல
காதல் மயக்கத்தில் பலர் உலா வர
கண்களை மூடி தன் காதலியை நினைத்து கொண்டான்...

இன்று தன் காதலி
நரைமுடி தலையோடு
கணவன் குழந்தையென
மகிழ்ச்சியான வாழ்க்கையில்
இருப்பால் என்று நினைத்து கொண்டு
காதலில் தோற்றவர்கள் திசைக்கு போனான்....

முதல் காலடி வைத்த போது
மெதுவாய் அவன் காதில் கேட்டது
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி...

ஒருகாலத்தில் ஒரு ஊரையே
பாட்டு பாடியே தூங்க வைத்தவன்
இன்று உறக்கமில்லாமல்
உரத்த குரலில் பாடி கொண்டிருந்தான் வெள்ளைசாமி....
எதிரே கண்களை கசக்கி கொண்டு வைதேகி....

இவனும் கண்களை கசக்கி கொண்டு
அடுத்த கால் எடுத்து வைத்தான்
எதிரே முரட்டு மீசை
தொடை தெரிய கட்டிய வேஸ்ட்டி
சிவந்த கண்கள் பார்க்கவே பயமுறுத்தும் உருவத்தில் இருந்தாலும்
பாடல் மட்டும் மெதுவாய்
சோள பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கொடியே
ஈச்சம் இளம் குருத்தே எந்தாயீ சோலையம்மா....

பயந்து போனான் அடுத்த அடி வைக்காமல்
திரும்பி பார்த்தான்
பார்க்கவே பாவமா ஒருத்தன்
கண்ணீரை இமைகளில் தேங்கி நிற்க
இதயமே இதயமே உன் விரகம் என்னை வாட்டுதே....

பல சோக கீதங்கள் இவனை சூழ
இவனும் காதலில் தொற்றவர்களோடு கலந்தான்...

காதலில் தோற்றவர்களை
தேற்றிடும் சில கவிதை வரிகள்
ஒவ்வொரு கல்லறை தோறும்...

சிறிது நேரம் கண்களில் கண்ணீர் வடிய
படித்துவிட்டு அழுதுவிட்டு எழுந்து நடக்க முற்பட்டபோது
அவனின் ஒரு கையை இழுத்து பிடித்தது இரு கைகள்
கண்ணீரை துடைத்து கொண்டே பார்த்தான்
இவளோ நாள் எங்கே போனிங்க
நான் எவளோ நாளா காத்திருக்கேன் தெரியுமா
அவன் காதலி கேக்க....

புரிந்தது அவனுக்கு எல்லாம்
அவன் கல்லறைக்கு வந்த அன்றே
அவளும் வந்துவிட்டாள் கல்லறைக்கு...

காதலால்
காலத்தால் உயிர் பிரிய
கல்லறையில் உயிர் கிடைத்து அவர்களின் காதலுக்கு மீண்டும்......

காத்திருப்புகள் சுகம் தாம் காதலில்
கல்லறை காத்திருப்பும் சுகமானது
இந்த உண்மை காதலர்களுக்கு....

இருவரும் கைகளை இருக
பிடித்துகொண்டு இணைந்து நடந்தனர்
காதலில் வென்றவர்கள் திசையை நோக்கி....

எழுதியவர் : பாலமுதன் ஆ (7-Jun-11, 11:54 am)
சேர்த்தது : பாலமுதன் ஆ
பார்வை : 606

மேலே