மழைப் போல் அழுகிறேன் பாரடி சிலைப் போல் நிற்கிறாய் ஏனடி
வெண்ணிலவே நில்லடி
விண்ணைவிட்டு நீயும்
போவதெங்கே சொல்லடி?
.
பௌர்ணமி நிலவாய் நீதானே
பாதைக் காட்டினாய்..
பாசம் வைத்து ஏனடி இன்று
உன் பாதை மாற்றினாய்..
உன் இரக்கம் தொலைந்ததால் பெண்ணே
என் உறக்கம் தொலைந்ததே..
உன் நினைவைப் போலவே
விஷமொன்று உலகில் இல்லையே..
திருவிழாவில் என்னைத் தொலைத்து
தேடாமல் போகிறாய்..
மணவிழா வேறு காண
மறந்தென்னை போகிறாய்.
காற்றைப் போல தேடியலைகிறேன் நானடி
கடவுள் போல ஓடியொழிகிறாய் நீயடி.
பனித்துளி கண்ட என் சிறுவிழிகள்
பெறுமழை பொழிவதை பாரடி..
உயிர்வளி இல்லா உலகில் தள்ளி
உன் நினைவுகள் போகுது ஏனடி..
அந்த கடவுளுக்கோ கருணையில்லை
என் கண்ணீருக்கோ வறுமையில்லை..
என் நெஞ்சோடு
உன் நினைவுகள் தொல்லை..
இனி மரணம்தானே பெண்ணே
என் வாழ்வின் எல்லை...
கரைப் போல் கிடக்கிறேன் நானடி
அலைப் போல் அடிக்கிறாய்
அனுதினம் அரிக்கிறாய் நீயடி..
பிறைப் போல் தேய்கிறேன் நானடி
சிறைப் போல் வதைக்கிறாய் நீயடி..
மழைப் போல் அழுகிறேன் பாரடி
சிலைப் போல் நிற்கிறாய் ஏனடி?
மழைப் போல் அழுகிறேன் பாரடி
சிலைப் போல் நிற்கிறாய் ஏனடி?