நாமாகிய மனது
நாமாகிய மனது ....!
கோபிரியன்
கடற்கரையோரத்து காற்றைப்போல
முகத்தில் படிகிறாய் .....
உன்னை சந்தித்தபின்பு
எண்ணைபடிந்த முகத்தை
வருடும் காற்றின் ஸ்பரிசம் ......
யாவரும் உறங்கிய
பின்னிரவில் இமை மூடாத
எனது விழிகளின் அசைவுகள் .....
வாகன நெருக்கடியற்ற
மௌன சாலையில்
நடந்து செல்லும் என்னுடன்
வழித்துணையாக நமது
நெருக்கமான காலங்கள் ....
நீயற்று நானிருந்த நாட்களில்
அழுதபடி வைத்துக்கொண்ட
தாடிகள் .....
எதைபற்றிய எதிர்பார்ப்பிலோ
தொடங்கி முடிவடையாமல்
செல்கிறது நமது
காதலின் தடங்கள்....!
இவற்றில் யாவற்றோடும்
நிம்மதியடையாது -எனது
நாமாகிய மனது ....!
நீ மட்டும் இல்லாமல் ......!
கோபிரியன்