என் கணிணித் தோழி......

தோழி என்ற வார்த்தையிலே
தோழமை மட்டும் அல்ல அங்கு
தாய்மையும் கலந்து உள்ளதென
காணக்கிடைக்கப் பெற்றிருந்தேன் ..

நேரத்திற்கு சாப்பிடு
நிம்மதியாய் தூங்கி எழு
உடல்நிலை என்றும் பத்திரமாம்
நீ வெல்லும் காலம் வெகு தொலைவில் அல்ல

இந்த வார்த்தைகள் யாவும் இனியவையாய்
என் தாயின் வாய்வழி கேட்ட பின்பு
என் கண்ணால் காணபெற்றேனே
என் தோழியின் கடிதத்தில் கணிணியிலே

என் காதல் இங்கே கைகூட
அங்கே கட்டளை இட்டாள் கடவுளிடம்
என் எண்ணம் யாவும் ஈடேற
வேண்டிக்கொண்டாள் இறைவனிடம்

பார்துப்பழகிக் கிடைத்த நட்பே
பாழாய்ப் போகும் இக்காலம்
முகமறியா இக்கணினி நட்போ
காலம் நெடுகும் கூட வர

என்றும் வேண்டும் என்பதையே
அந்த இறைவனை வேண்டி வாழ்கின்றேன்.....

எழுதியவர் : ஈஸ்வர்தனிக்காட்டுராஜா.... (8-Jun-11, 1:39 pm)
பார்வை : 899

மேலே