மீளாத் துயில் கொண்டிருந்தாள்

செறிவிழந்து கிடந்த வீடு
அவன் இல்லாததைச் சொல்லியது....

செயலிழந்து போன செவியோ
அவன் குரல் கேட்க தவித்தது...

வலுவிழந்து அசந்த உடம்பு
அவன் வரவிற்காய் ஏங்கியது...

பொலிவிழந்து வாடிய மனது
அவன் நினைவால்மட்டுமே துடித்தது...

அயல் நாடு போன மகனோ
நான் யாருமில்லாத அனாதை எனக்கூறி
காதலியிடம் காதல் வாங்கிக்கொண்டிருந்தான்...

அன்னையிங்கே தவிப்போடு
அவன் எண்ணம்தாங்கி மீளாத் துயில் கொண்டிருந்தாள்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (15-Nov-15, 5:05 pm)
பார்வை : 535

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே