காத்திருப்பேன்

ரோசாவுக்குள் ஒளிந்திருக்கும்
ஒளிச்சிலம்பே கண்சிமிட்டும்
கவர்ச்சி ஒளியே

என்னைக் கவர்ந்ததடி
உன் காந்தப்பார்வை
திறந்த காட்டு உன்
ஓவியக் காதலை
கண்டு கொள்ள
உன் கண்ணிரன்டும்
போதுமடிகாதல் செல்ல
வைக்க

உன் விழி எங்கேநான்
காத்திருப்பேன்
உன் காலடி பட்ட
சுவடை ஏந்தி

மரண ஊர்வலத்தில் கூட
உன் சுவடுகளை
என் உதடுகளால்
மறைத்து காத்திருப்பேன்


கவிஞர் அஜ்மல்கான்
- பசறிச்சேணை பொத்துவில்-

எழுதியவர் : கவிஞர் அஜ்மல்கான் (17-Nov-15, 6:41 am)
Tanglish : kaathirupen
பார்வை : 102

மேலே