சென்னை மழை
எதிர்பாராமல் வந்து..
என்மேல் வீழ்ந்து...
கண்களில் கலந்து
என்னோடு உரையாடி..
என்னில் உறவாடி..
மனம் மகிழ வைத்தாய்..
கோபமெல்லாம் கொட்டி
என்னுள் நின்று
என்னை விட்டகலாமால்
தேங்கி நின்று
திணற வைக்கிறாய்...
என்னவளே நீ சுகமா..?
என்னை விட்டு செல்வாய் நலமாய்...!