கலாச்சாரம்
அவனுக்கு அப்பாவின்
வயதிருக்கும் என
இவ்விடம் குறிப்பிடக்
காரணமாயிருந்த பெண்ணிற்கு
மகளின்
வயதும் இருக்கலாம்....!
கிழத்தின் ஜொள்ளைப்
பார்க்கச் சொல்லி தோழியிடம்
கிசுகிசுத்துச்
சிரித்தவாறே இன்னும்
நிமிர்ந்து அமர்ந்துகொண்ட
அவளும்...
பார்வைகளைத்
தாழ்த்தியவாறே அடுத்த
வாய்ப்புக்காகக் காத்திருந்த
அவனும்...
உடைக் கலாச்சாரக்
கருத்துக் கணக்கெடுப்பின்
போது..
மற்றவைகளில் தானே
வந்திருப்பார்கள்...?.