ஹைக்கூ

மழை நனைக்கத் தடை
தாய்க் கொடுத்தாள்
கையில் குடை !
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தாயின் ஈரநெஞ்சம்
நனைய விடவில்லை
குடைக்குள் மழலை !
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அடித்தது வான்மழை
துடித்தது தாய்மை
பிடிக்கக் கொடுத்தாள் குடை !
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சிந்தும் மழையில் குடையிருந்தும்
நனைய வைத்தது
தாயின் பாசமழை !

( படம் - ( Dhakshan haikoo)

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (19-Nov-15, 10:06 pm)
Tanglish : haikkoo
பார்வை : 93

மேலே