முள்கள் கவிதை
முள்கள்…!!
*
சந்தோஷம் முகத்தில் மலரும் பூக்கள்
சந்தேகம் மனதைக் குத்தும் முள்கள்
*
உயர்ந்த கோபுரத்திலும் வாழ்கின்றன
கூண்டிலும் வாழ்கின்றன புறாக்கள்.
*
இன்று உங்களை இகழ்பவர்கள்
நேற்று உங்களைப் பாராட்டியவர்கள்.
*
செயலைத் தொடங்குவது எளிது
செய்து முடிப்பதுதான் கடினம்.
*