மலர்

இருவேறு நிலம், என்றும் நிறைவேறா நீளம்
ஒரு நொடியில் கடந்திடுது ஈடேறா தூரம்
கருவிழியின் கருந்துளையை கடக்காது
வீழும்
எதுஎதுவும் திசையிழந்து அவளூடே போகும்
நடக்கின்ற நிகழ்காலம் தவிதவிக்கிற கோலம்
வலைகின்ற நிகழ்வொன்றில் நிலைகொண்ட மாயம்
கண் மணியின் கவர்வாலே கரைந்திடுது காலம்
அதுவே இரு உலகங்கள் இணைகின்ற பாலம்

அழகே உன் விழியில் நுழைந்தேன் எனதழகே
அழகே என் உலகம் கடந்தேன் அதுமுதலே
அழகே உன் விழியில் விழுந்தேன் கருவிழியே
அழகே உன் உலகம் இணைந்தேன் விழிவழியே

ஒரு வேனில் காலம் விழிமூடும் யாமம்
விரிகின்ற பூவும் விழி மூடாத நோக்கும்
தளாத என் நெஞ்சின் கேளாதொரு மௌனம்
ஓயாத இரு கண்ணின் தீராத தாகம்

அவிழ்கின்ற மலருன்மேல் தவழ்கின்ற காற்றில்
துழவ்கின்ற ஒளி கொண்டு துகிலாக நான் மேவத்
துவள்கின்ற வளி தூரத்துறவானதா
துறவேகித் துறவானதா
திறவாத கூட்டின் தீராதோர் இன்பம்
திறளான தேன் ஆற்றின் வடிவானதில்
உறவாடும் வேளை இறவாது வேண்டும்
உயிர்வாழ வழிகண்டு உடல் மாற வேண்டும்

எழுதியவர் : இராஜ ராஜன் (21-Nov-15, 2:35 pm)
Tanglish : malar
பார்வை : 123

மேலே