அவள் என்பது 8 - கற்குவேல் பா

மத்தாப்பு
தீர்ந்துவிட்டதாம் ,
அழுகிறது
எதிர்வீட்டுக் குழந்தை !
நீ
கொஞ்சம்
சிரித்து விட்டுப் போ ..
மத்தாப்பு
பார்த்த மகிழ்ச்சியில்
உறங்கச்
சென்று விடுகிறோம்
குழந்தையும்
நானும் !

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (23-Nov-15, 1:57 pm)
பார்வை : 81

மேலே