பெட்ரோலிய காதல்

ரெண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் தான் இருக்கும்
என் வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் மனா தூரம் .
வாரம் ஒரு முறை இட்டல் போதும், ஆனால்
தினமும் வருகிறேன் என் வாகன எரிபொருள்காக இல்லை
என் இதய எரிபொருள் வேண்டி.
எப்போதவது பகல்லில் தொியும் நட்சத்திரம் போல்
உன் மீது புன்னகை ரேகை தொியும் அதற்காக.
உன் கிழிந்த கனரக காலணி வழியாக சுண்டு விரல் பார்ப்பதற்காக.
உன் பெண்மை மீது ரசாயன வசம் வருமே அதை பிடிப்பதற்காக.
என் இராஜ்யத்தின் ராணி நீ.
நான் பேச வரும்போதும்பூஜ்யம் பார்க்க சொல்கிறாய்.
நீ என் வாகன எரிபொருள் தொட்டியில் வீடும் எண்ணெய்யில்,
பாதி காற்றில் அத்வேதம் அடைவது போல்,
நான் எப்போது உன்னில் அடைய போகிறேன்
நெடுஞ்சாலை மரங்கள் மழைக்காக காத்திருப்பது போல்
உனக்காக நான் காத்திருக்கிறேன்
உன் பணி விடு என் பிணி என்னை தீா்க்கும் முன்
வந்து விடு வந்து என்னில் சோ்ந்து விடு
நீ என் சொந்த புத்தகமாய் இரு
உன்னை நூலகாத்திலிருந்து மீட்க்க வந்தவன் நான்
உன் கைகள் கொண்ட எண்ணெய் பிசுக்கை
என் முகத்தில் பூசி சுத்தம்மாக்கு உன் மேல் வீசும்
எரிஎண்ணெய் வீச்சு என் மேல்லும் வீசட்டும்
நாளை நிச்சயம் உன்னிடம் சொல்லிவிடுவேன்
என்னை பூஜ்யமக்காமல் மணபுா்வமாய் ஏற்றுக்கொள்.

எழுதியவர் : விக்னேஷ் (24-Nov-15, 3:51 pm)
பார்வை : 103

மேலே