உயிர் போகும் வலி

என் இதயம் கணக்குதடி...

நீ என்னோடு இல்லாததினால்...

கண்வற்றிப் போனதடி...

உனை நினைத்தே தினம் அழுவதினால்...

நீ இல்லாத இரவெல்லாம்...

எனை கொள்ளாது கொள்ளுதடி...

உயிர் போகும் வலி எல்லாம்...

ஒவ்வொரு நாளும் உணர்வதினால்...

ஆறடி குழிக்குள் அடங்கும் வதைப்பை...

நான்கு சுவற்றுக்குள் உணருகிறேனடி...

உனை நினைக்க மறக்கும் வழி உள்ளதடி...

என் உயிர் போகும் போது அது நடக்குமடி -ஆனால்...?

உன் நினைவுகள் மறையாதடி என்...

கல்லறைக்குள் தான் அடங்கிக் கிடக்குமடி.

எழுதியவர் : தினேஷ்குமார் ஈரோடு (26-Nov-15, 12:51 am)
Tanglish : uyir pogum vali
பார்வை : 327

மேலே