சலாவு55கவிதைகள்
நீ எனக்கு இல்லை என்றாலும்
நம் காதல் இல்லை என்றாகிடாது ..
உன் வாசம் எனக்கு இல்லை என்றாலும்
என் சுவாசம் நீ இல்லை என்றாகிடாது ..
உன் நிஜத்தில் நான் இல்லை என்றாலும்
என் நிழலில் நீ இல்லை என்றாகிடாது ..
உன் வசந்தம் நான் இல்லை என்றாலும்
என் வாழ்க்கை நீ இல்லை என்றாகிடாது ..
உன் உறவில் நான் இல்லை என்றாலும்
என் உயிரில் நீ இல்லை என்றாகிடாது .
நீ எனக்கு இல்லை என்றாலும்
நம் காதல் இல்லை என்றாகிடாது ...
.
அன்பே உனை மறவேன்
அனுதினமும் உனை நினைப்பேன் .....
.....
........
..........................:-சலா,