மின்னல் வீசியது போல் -நீ

கண்ணுக்கு இனியவளாய்
நீண்ட நெடிய கண்ணுடையவளே...
எந்நாளும் எனை கரைத்து
ஒளி கொண்டு ஈர்ப்பவளே...
உன் சொல்லால் என் கவலையை குறைத்து
வில் இல்லாது என்னை உன்னில் வீழ்த்தியவளே...
என் அகக் கடல் பொங்கி என்னுள்
உன் நினைவை தினம் கூட்டுதடி...
வீசி வரும் தென்றல் என்னை
உன் வாசம் வீசிய பாதை பக்கம் ஈர்த்துச் செல்லுதடி...
மாயமானவளே உன்னை
காணும் தடம் பக்கம் காத்துக்கிடக்கிறேனடி...
மின்னல் வீசும் வேகத்தில்
ஒளிர் வீசி நிரப்பியது போல்
முன் வந்து நின்றாயே...
மயங்கினேன் அக்கணமே மண்ணில்
விழாது உன்னில் விழுந்தேனடி...
துயில் கொள்ளச் செல்லும்
நிலவு கூட சற்று நிதானமாக செல்லுதடி...
உன்னை கண்டதும் பார்த்து செல்லுதடி
மானுடன் நான் மட்டும் என்ன ?
உன்னை பார்த்தபின் துயில் மறந்து
உன்னையே நினைத்து கிடக்கிறேனடி...