ஒன்றுமில்லாதவன்
“ஒன்றுமில்லாதவன்”
ஒன்றுமில்லாதவன்
என்றே…
ஒதுக்கி தள்ளின
உறவுகள்!
ஒன்றுமில்லா
ஒன்றில்தாம்
பிறந்ததாம்
பிரபஞ்சம்!
பிரபஞ்சத்தின்
சிறு புள்ளியான
ஒன்றுமில்லா…
”நான்”
ஒன்றுமில்லாதவற்றுள்…
ஒன்றுக்காக…
தேடுகிறேன்…தேடுகிறேன்!
புலப்படவில்லை
ஒன்றுமே!
ஒன்றுமே
புலப்படா பொழுதில்….
உதித்தனவே….?
ஒன்றுமில்லாமல்
போனது ”நானும்”
ஒன்றுமில்லா....
”நானோ”
ஓரமாய் அமர..
காணத்தான்
காத்திருக்கின்றன……
ஊராரும்….உறவுகளுமே….!
--- கே. அசோகன்.