பாவமா சாபமா ---- சக்கரைவாசன்

பாவமா ? சாபமா ?
************************************
பாவத்து மன்னிப்பாம் சம்பளமோ மரணமாம்
பாவிக்க வெகுமதியாம் பாவிக்கு தண்டனையாம் (பாவிக்க = பாவனை )
பாவித்த அம்மனையும் தரிசிக்க கட்டணமாம்
பாவையவள் கைபிடித்த பாதிநாளில் இணை பிரிவாம்
பாவதனை அரங்கேற்ற தமிழர்க்கு சோதனையாம்
பாவிக்கும் சாவுக்கு உண்மருந்தே காரணமாம்
பாடையில் வித்திட்ட சவம் தனைப் போட்டுவைத்து
பாதையின் உரிமைக்காய் நடுச் சாலை நல் மறிப்பாம்
பாவிடும் இவ்வனைத்தும் பாவமா இல்லை சாபமா ?-- இப்
பாவப் புவியிதனில் பிறந்து நாம் விழுந்ததுவும்
பாவம் புரிவதற்கா பாவத்தைப் போக்கிடவா ?

( யாரறிவாரோ ? )

எழுதியவர் : சக்கரைவாசன் (2-Dec-15, 6:54 pm)
பார்வை : 83

மேலே