வெள்ளத்திற்குப்பின் குரல்கள்
சுயத்தை இழந்துவிட்டு
தனித்துவிடபட்டதாக
இங்கே எங்களது
குரல்....
ஆர்ப்பட்டமில்லாமல்
ஊர்ந்து போய்கொண்டுஇருக்கிறது
கடவுளின் கண்ணீர்
செய்யாத குற்றத்திற்காக
எங்கள் யாவருக்கும்
மரண தண்டனை
ஆனால்
உயிருள்ளது ...
மழை நண்பனுக்கு
எங்களை
குடித்துவிட்ட பின்பும்
தாகம் அடங்கவில்லையோ ...!
உணவும் உடையும்
குடிக்க நீரையும்
வட்டியும் முதலுமாக
வாங்கிக்கொண்ட மாரியே...!
எங்கள் இனத்தின்
அழிவையும்
பரிசாக பெற்றுக்கொள்
மாபெரும் இயற்கையே
கொஞ்சம் உனது
வருகையை நிறுத்துவாயாக
ஒரு கணம் நாங்கள்
வாழ்ந்து கொள்கிறோம் ...!
உனது வெள்ளத்தில்
சாதிக்கொடுமை
பெண்ணியக்கொடுமை
பணக்கொடுமை
அரசியல் ஊழல்கள்
இவற்றை அடித்துக்கொண்டு
போவாயாக.....!
மண்ணில் அமிழ்ந்து
சாக்கடை கலக்கி
சோற்றைகொன்ற
இந்த மழையில்
முதல் மாதக்குழந்தையை
எங்கனம் தேடுவேன்
இந்த தமிழ்பெண் ....!
அடுத்து நீ வரும்வரை
நானும் அனாதைதான்
இந்த சமூகமும் கூட ....!