மழையால் சென்னைக்கு வந்த அவதி

வறண்ட வானமாய்!

வாகனங்களின் ஊர்கோலமாய்!!

எறும்புகளாய் திரியும்
மக்கள் கூட்டமாய் !!

காணும் இடமெங்கும்
கடைத் தெருக்களாய்!!

உப்புகள் நிறைந்த
கடல் பகுதிகளாய்!!

தொய் ந்தவனையும்
தூக்கி நிறுத்தும்
தொழிற் பட்டறைகளாய்!!

வசதி உள்ளோரையும்
வரவேற்கும்
வசந்த மாளிகையாய்!!

பெட்டிகள் நிறைந்த
அடுக்கு மாடிகளாய்!!

ஏற்றுமதியும் இறக்குமதியும்
எண்ணிறந்த அளவில்
இருக்கும் துறைமுக
பட்டணமாய்!!

வானில் பறக்கும்
பட்டம் போல்
காட்சி அளிக்கும்
வானூர்திகளு மாய் !!

கண்களுக்கு விருந்தளிக்கும்
காட்சி சாலைகளுமாய்
நிறைந்திருந்த மாநகரம்!!!!!!!

மழைநீரால் மிதக்கும்
மாகோலம் தான் என்ன?

ஒருபக்கம் சொல்லொணா
துயரம் இருந்தாலும்
மறுபக்கம் மானுடத்தின்
பேராசையே இவ் வழிவிற்கு
காரணம் என யோசிக்க
தோன்றுகிறது !!!

ஏரிக் குளங்களை
இருப்பிடமாக்கி !!

கடற்கரை அருகே
கட்டிடம் கட்டி!!

கடல் அலைகளுக்கு
கட்டளை போட்டு!!

கடற்கரை மணலைக்
கொள்ளையிட்டு!!

காற்றடைத்த பந்துபோல்
மக்களால் நிறைந்த
அந்நகரின் பெரும்
சுமையை

பூமி அதிர்ச்சிகளும்,
சுனாமிப் பேரலைகளும் ,
மழைநீரின் வெள்ளமும் ,
தொற்று நோய்களும்
வந்து சில நேரங்களில்
குறைக்கத்தான்
செய்கிறது !!


இப்படிப்பட்ட பாதிப்புகள்
ஏழைகளை பெரிதும்
பாதிப்பது இல்லை!!!!!!!

ஏனெனில் , அவன் உடைமைகளும்
அவனை விட இலேசானதே!!

ஆனால் , வசதி உள்ளோருக்கு
வறுமையின் கொடுமையைச்
சொல்லிக் கொடுக்கிறது!!!
.
பதவியில் உள்ளோரை
பதற்றமடைய செய்கிறது!!

உறவினர்களின் அன்பை
உதறித் தள்ளிய உறவுகளின்
அன்பை உணரச் செய்கிறது!!

குடும்பங்களில் உள்ள அனைவரையும்
ஒன்றாக காணச் செய்கிறது!!

புதியச் சென்னையாய்
மீண்டும் உருபெறச் செய்கிறது!!

இதுவே இறைவனின்
திருவிளையாடல் !!!!!

எழுதியவர் : பெ. ஜான்சிராணி (4-Dec-15, 6:56 pm)
பார்வை : 290

மேலே