அத்தனை அக்கறையா
![](https://eluthu.com/images/loading.gif)
அத்தனை அக்கறையா ?
என்னையே எனக்குள்….
தேடுகையில்….
உடல் இங்கிருக்க…
மனமோ….
ஆடுகள் புற்களை
மேய்வது போலவே…
தாவி…தாவியே
எண்ண புற்களை
எங்கெங்கோ …..மேய்கிறது…..
மேய்ந்து கொண்டே
இருக்கையில்…
ஒரு பொழுதினில்
என்னையே காணோம்!
ஐயோ ”என்னை”
இழந்து விட்டேனோ?
திடுக்கிட்டேன்
திடுக்கிடும் போதே….
கண்டுபிடித்து சேர்த்தது
ஏதோ ஒன்று!
என்னை…!
மீண்டும்….மீண்டும்
இழந்து விடவே
எண்ணுகிறேன்.
இழந்து விடாமல்
இழுத்து வந்து
சேர்ப்பதில்
அத்தனை அக்கறையா…?
“மாயைக்கு”
.
கே. அசோகன்.