பேரழகி நீதானடி

கண்ஜாடையை அவிழ்த்து என்னை
கணப் பொழுதில் வீழ்த்தியவளே ...

உன் ஜாடைபோல் ஊரில் எப்பெண்ணவளையும்
நான் கண்டதில்லையடி இக்கணம் வரை...

சொல்லுதற்கு அறிய சொல்லாய்.
உன் பெயர் சொல்ல உணர்ந்தேனே ...

விண்மீன் கூட வீண்தானடி
உன் விழி ஒளி வீசுகையில்...

நிலவை எடுத்து செதுக்கினாலும்
உன் போல் சிலை வடித்திட முடியாதடி...

பேரழகி பட்டம் தருமாயின்
உனக்குத் தான் பொருந்துமடி ...

எழுதியவர் : தினேஷ்குமார் ஈரோடு (11-Dec-15, 1:10 pm)
பார்வை : 3219

மேலே