காதலி பிறந்தநாள்
மனம் விரும்பும் காதலியே...
நீ முதன் முதலாய் இவ்வுலகை கண்ட நாள் இதுவே..
உன் குரலோசையை யாவரும் கேட்டறிந்த நாள் இதுவே..
இயற்கையின் ஸ்பரிசத்தை உணர்ந்த நாள் இதுவே..
உன் பிறப்பை சொந்தமாக்கி பெருமை கொண்ட நாளும் இதுவே..
உன் அழுகை கண்டு உன்தாய் மகிழ்ந்த நாளும் இதுவே..ஆம் இன்று உன் பிறந்த நாள்...இந்நாளில் உன் மனம் போல் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகளுடன் பிரியமான காதலன்...