நிலவுடன் காதல்

கவிஞ்சன் இரசிக்கவே இறவுகள் பிறந்ததோ?
அடடே..!
எத்தனை அமைதி!
இவ்வுலகிலும், என்னுள்ளத்திலும்!

அவள் ஒளியால்..
என்னுலகும், வாழ்வும்
வெளிச்சம் கொண்டது!

பொலிவுடன் ஒளிரும் அவள் முகத்தில்
சிறு களங்கங்கள் தோன்றின
உற்று நோக்கினேன்..

அவை களங்கங்கள் இல்லை;
காதல் மிகுதியால் நான் தந்த
முத்தத்தின் சுவடுகள்!!

பகலில் வேலைகள் முடித்து,
இரவினில் எனக்கென விழித்து,
உருகி உருகி காதல் செய்து,
உருவத்தில் நாளும் மெலிந்தால்..!

ஒரு நாள் மட்டும் ஒய்வு கொண்டு,
மறுநாள் மீண்டும் பிறப்பால்!

நிலவிடம் காதல் கொண்டதால்,
இரவில் இனிதாய்க் கவிதைகள் தோன்றின,
இரசித்து இரசித்து எழுதி,
படித்துப் படித்துக் காட்டினேன் அவளிடம்.

விடிய விடிய கேட்டு விட்டு,
வெட்கத்தில் பதில் சொல்லாமலே மறைந்தால்!!

இன்று விடையுடன் வருவாளென,
இரவிர்க்காகக் காத்திருகின்றேன்.....

காதலுடன்..!!

எழுதியவர் : நேதாஜி (11-Dec-15, 9:56 pm)
பார்வை : 257

மேலே